'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!

வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட டீசர்,venkat prabhu naga chaitanya in custody movie teaser out now | Galatta

டிக்கெட் வாங்கித் திரையரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகரும் இரண்டரை மணி நேரத்தை எந்த கவலையும் இன்றி ஜாலியாக ரசிக்கும் வகையில் கலக்கலான என்டர்டைனிங் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவந்த சரோஜா திரைப்படம் வித்தியாசமான காமெடி த்ரில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து பக்கா காமெடி என்டர்டெய்னராக இயக்கத்தில் வெளிவந்த கோவா திரைப்படமும் வெற்றி பெற, தனது அடுத்த திரைப்படத்தில் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்ற வெங்கட் பிரபு, அஜித் குமாரின் 50வது திரைப்படமாக தயாரான மங்காத்தா திரைப்படத்தை இயக்கினார். படத்தின் அத்தனை அம்சங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மெகா ஹிட் பிளாக்பஸ்டரான மங்காத்தா திரைப்படம் அஜித் குமாரின் திரை பயணத்தில் மைல் கல் படமாக அமைந்தது. 

அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கலக்கலான படங்களாக கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 ||, முதல் முறை நடிகர் சிலம்பரசன்.TR உடன் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே டெலிகாஸ்ட் என்னும் வெப்சீரிஸையும், குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் லோகம் எனும் எபிசோடையும் இயக்கிய வெங்கட் பிரபு, கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்டிம் ஆந்த்ராலஜி வெப் சீரீஸில் கன்ஃபசன் எனும் எபிசோடையும் இயக்கியிருந்தார். இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கஸ்டடி.  நடிகர் நாக சைதன்யா தனது திரை பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக நடிக்கும் கஸ்டடி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கஸ்டடி படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த கஸ்டடி திரைப்படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியானது அந்த டீசர் இதோ
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட மாஸான பாடல்... இதுவரை வெளிவராத சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! வீடியோ உள்ளே
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட மாஸான பாடல்... இதுவரை வெளிவராத சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! வீடியோ உள்ளே

சினிமா

"யார் அந்த பிகிலி?"- ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!

டாடா தயாரிப்பாளருடன் இணைந்த அருள்நிதியின் அடுத்த அதிரடி படம்... சர்ப்ரைஸாக வந்த மிரட்டலான டைட்டில்-மோஷன் போஸ்டர் இதோ!
சினிமா

டாடா தயாரிப்பாளருடன் இணைந்த அருள்நிதியின் அடுத்த அதிரடி படம்... சர்ப்ரைஸாக வந்த மிரட்டலான டைட்டில்-மோஷன் போஸ்டர் இதோ!