இயக்குனர் வசந்த பாலன் - கைதி & மாஸ்டர் பட நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியின் "அநீதி"... விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

வசந்த பாலன் - அர்ஜுன் தாசின் அநீதி பட ட்ரெய்லர் வெளியீடு,vasanthabalan arjun das in aneethi movie trailer out now | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ச்சியாக தரமான படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தன் திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்தபாலன் அவர்கள் பின்னர் 2002 ஆம் ஆண்டு வந்த ஆல்பம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்திற்கு பிறகு மிகப் பிரபலம் அடைந்த இயக்குனர் வசந்தபாலன், வெயில் திரைப்படத்திற்க்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, தமிழ் மாநில விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். 

அடுத்தடுத்து வரிசையாக சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர் வசந்தபாலன் காலம் கடந்தும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்படும் ஆகச்சிறந்த படமாக உருவாக்கிய திரைப்படம் தான் அங்காடித் தெரு. இயக்குனர் வசந்தபாலன் அவர்களுக்கு எக்கச்சக்கமான விருதுகளை வென்று கொடுத்த அங்காடி தெரு படத்தை தொடர்ந்து காவல் கோட்டம் நாவலை தழுவி பக்கா பீரியட் படமாக வசந்தபாலன் இயக்கிய அரவான் திரைப்படம் பெறும் வரவேற்ப்பை பெற்றது. அடுத்ததாக தனது அடுத்த பீரியட் படமாக இயக்கிய திரைப்படமான காவியத் தலைவன் திரைப்படமும் கவனிக்க வைத்தது. இந்த வரிசையில் கடைசியாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸானது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய வசந்தபாலன் ஜெயில் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். 

இந்த வரிசையில் இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த படைப்பாக வெளிவர இருக்கும் முக்கிய திரைப்படம் தான் அநீதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், பிக் பாஸ் பரணி, ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் M.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G.வசந்தபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவில், ரவிக்குமார்.M படத்தொகுப்பு செய்திருக்கும் அநீதி திரைப்படத்தின் வசனங்களை S.K.ஜீவா எழுதியுள்ளார்.

ஜீவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைத்திருக்கும் அநீதி திரைப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகளை பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் கார்த்திக் நேத்தா மற்றும் ஏகாதேசி பாடல்களை எழுதியுள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது S பிக்சர்ஸ் சார்பில் வழங்கும் அநீதி திரைப்படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் அநீதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அநீதி திரைப்படத்தின் மிரட்டலான அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மாவீரன் முதல் தண்டட்டி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!
சினிமா

மாவீரன் முதல் தண்டட்டி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ!

‘நல்ல திரைப்படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும்!’- 50நாட்களைக் கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்… Dஇமானின் அறிக்கை இதோ!
சினிமா

‘நல்ல திரைப்படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும்!’- 50நாட்களைக் கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்… Dஇமானின் அறிக்கை இதோ!

தளபதி விஜயின் அடுத்த அட்டகாசமான முன்னெடுப்பு... காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும்
சினிமா

தளபதி விஜயின் அடுத்த அட்டகாசமான முன்னெடுப்பு... காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளிலும் "பயிலகம்"! குவியும் பாராட்டுகள்