"தளபதி விஜயின் லியோ படத்தில் இணைக்கிறாரா அர்ஜுன் தாஸ்..?"- ட்ரெண்டாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

லியோ படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு,arjun das new status photo goes trending thalapathy vijay in leo | Galatta

இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஃபேன் பாய் சம்பவமாக இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் ஆல் டைம் ரெகார்டாக வசூல் சாதனை படைத்தது. இதனை அடுத்து இந்திய அளவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தளபதி விஜயின் திரைப்பயணத்தில் 67 வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பிருந்தே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிககு பிறகு மீண்டும் இணைந்துள்ள தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

முன்னதாக கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில், அடுத்த கட்டமாக தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்றனர். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். லியோ திரைப்படத்தின் மீதான இந்த பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மற்றொரு பெரிய காரணம் LCU. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரமாகிய திரைப்படங்களின் இடையே இருக்கும் கனெக்ஷன்களால் உருவாகி இருக்கும் இந்த யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ திரைப்படமும் இடம்பெருமான மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக வெளிவந்த லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவான பிளடி ஸ்வீட் வீடியோவை டிகோட் செய்து லியோ திரைப்படம் LCUல் இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கைதி திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் வைத்துள்ள புகைப்படம் அவர் தளபதி விஜயின் லியோ படத்தில் நடிக்க உள்ளதாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் புதிய படத்திலும், இயக்குனர் வசந்தபாலனின் அநீதி திரைப்படத்திலும் அர்ஜுன் தாஸ் தற்போது நடித்து வருகிறார். எனவே இது அந்தப் படங்களுக்கான படப்பிடிப்பின் புகைப்படமாகவும் இருக்கலாம் என தெரிகிறது. ஆகவே லியோ படத்தில் அர்ஜுன் தாஸ் இருக்கிறாரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நடிகர் அர்ஜுன் தாஸின் அந்த புகைப்படம் இதோ…
redin kingsley joins with director arivazhagan aadhi in sabdham movie

அதர்வா - சரத்குமார் - ரஹ்மானின் அட்டகாசமான நிறங்கள் மூன்று... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!
சினிமா

அதர்வா - சரத்குமார் - ரஹ்மானின் அட்டகாசமான நிறங்கள் மூன்று... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!

சர்தார் தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ் - ஹரிஷ் கல்யாண்... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்! விவரம் உள்ளே
சினிமா

சர்தார் தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ் - ஹரிஷ் கல்யாண்... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்! விவரம் உள்ளே

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான பீரியட் படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான பீரியட் படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!