சிலம்பரசன்TRன் STR48 படத்தின் அதிரடியான லுக் இதுதானா? சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மாஸ் புகைப்படம் இதோ!

சிலம்பரசன்TRன் STR48 படத்தின் அதிரடியான லுக் வெளியீடு,silambarasan tr new look for str48 photo with design periyasamy | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட, நடிகர் சிலம்பரசன்.TR தன் மீது எறியப்பட்ட பல எதிர்மறை விமர்சனங்களை வெற்றியின் படிக்கட்டுகளாக்கி கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உச்சத்தை தொட்டு ரசிகர்களின் மனதில் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். அந்த வகையில் முதலாவதாக தனது தோற்றத்தின் மேல் இருந்த எதிர்மறை விமர்சனங்களை தவிடுப்போடியாக்கி யாருமே எதிர்பாராத வகையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் கம் பேக் கொடுத்தார் சிலம்பரசன்.TR. நடிகர் சிலம்பரசன்TRன் இந்த புதிய லுக் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பின்னர் மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடங்கிய சிலம்பரசன்.TRக்கு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அதற்கான பாதை அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம்.

தனது புதிய லுக்கின் மீது இருந்த ஆச்சரியம் கொஞ்சமும் குறைவதற்கு முன்பு மேலும் ஒரு ஆச்சரியத்தை வென்று தணிந்தது காடு திரைப்படத்தின் வாயிலாக சிலம்பரசன்TR கொடுத்தார். இன்னும் உடல் மெலிந்து முத்து என்கிற அந்த கதாபாத்திரத்திற்காக ஆத்மார்த்தமாக தனது உழைப்பை கொட்டிய சிலம்பரசன்.TR வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வேறு ஒரு ஆளாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு தரமான கேங்ஸ்டர் படமாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காடு பார்ட் 2 திரைப்படமும் விரைவில் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். முன்பே அறிவித்தபடி இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா & ஜூங்கா ஆகிய படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று மார்ச் 9ஆம் தேதி சிலம்பரசன்.TR தனது திரைப்பயணத்தில் 48 வது படமாக நடிக்கும் அடுத்த படமான STR48 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முன்னதாக நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR48 திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் STR48 திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி உடன் புதிய லுக்கில் நடிகர் சிலம்பரசன்.TR இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. சிலம்பரசன்.TRன் இந்த புதிய லுக் தான் STR48 படத்தின் லுக் என ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ…
 

Are you waiting for this lit combo? 🔥🔥 @SilambarasanTR_ @desingh_dp #UlagaNayagan @ikamalhaasan @RKFI #STR48 #SilambarasanTR #Atman #DesinghPeriyasamy #Silambarasan #STR #Simbu #KamalHaasan #Galatta pic.twitter.com/QZ7eUfDBfp

— Galatta Media (@galattadotcom) March 9, 2023

பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு...
சினிமா

பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு... "குந்தவை" திரிஷாவின் இதுவரை பார்த்திராத பிரம்மிப்பான வீடியோ இதோ!

சினிமா

"உலகநாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்TR!"- STR48 இயக்குனர் இவர் தான்... அட்டகாசமான அறிவிப்போடு வந்த மிரட்டலான வீடியோ இதோ!

உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே
சினிமா

உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே