சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.

Vani Bhojan pairs Opposite Jai in Web Series

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தமிழிலும் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் அறிமுகமானார்.

Vani Bhojan pairs Opposite Jai in Web Series

வைபவுடன் இவர் நடித்துள்ள லாக்கப் திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் வாணி போஜன்.இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த தொடரை சாருகேஷ் சேகர் இயக்கியுள்ளார்.இந்த தொடரின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் மீதமுள்ளதாகவும் விரைவில் இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vani Bhojan pairs Opposite Jai in Web Series