நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகளின் முன்புறம் ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிச் செல்வது வருத்தத்தை அளிக்கிறது. 

Venkat Prabhu About Reopening Of Wine Shops

தமிழகத்திலும் வருகிற 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Venkat Prabhu About Reopening Of Wine Shops

இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ஒயின் ஷாப்பும் கொரோனா விற்க தொடங்கிட்டாங்க போல என்று யூகிக்கிறேன். உங்களிடம் ஸ்டாக் இருக்கும், ஏழை மக்கள் என்ன செய்வார்கள் என என்னைப்பார்த்து  சிலர் சொல்வார்கள் என்று உறுதியாக இருக்கிறேன். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆச்சு. பாதுகாப்பு தான் முக்கியம் என்று பதிவு செய்துள்ளார்.