தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா.

மலையாள திரையுலகலகில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்யாவுடன் இணைந்து மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகி பாபு வேடத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் RK செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலர் வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.