தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகரான வைகைபுயல் வடிவேலு பலகோடி தமிழர்களில் இதயங்களில் என்றென்றும் நகைச்சுவை மன்னனாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் நடிக்க Red Card போடப்பட்ட நிலையில் தற்போது தடைகள் நீங்கி மீண்டும் சினிமாவில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

மீண்டும் ரசிகர்களை தனது நகைச்சுவையால் மகிழ்விக்க காத்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு முன்னதாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நகைச்சுவை கதைக்களங்களில் வரிசையாக திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக வைகைப்புயல் வடிவேலு அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்து மனதை திருடி விட்டாய் திரைப்படம் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது. 

மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் வடிவேலு தனஙனக்கே உரித்தான ஸ்டைலில் ஆங்கிலத்தில் பாடும் Sing In The Rain பாடல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இன்றும் ரசிக்கப்படுகிறது. அவ்வகையில் பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் சமீபத்தில் சந்தித்த போது வடிவேலு Sing In The Rain பாடலை பாடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…