தனது சிறந்த நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த மகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ்,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் கோப்ரா படத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முன்னதாக கோப்ரா படத்திலிருந்து “தும்பி துள்ளல்” பாடல் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக “அதிரா” பாடல் வருகிற 22ஆம் தேதி வெளியாகும் என சீயான் விக்ரமின் பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 17) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கோப்ரா படத்தின் 2வது பாடலை அறிவிக்கும் வகையில் படக்குழுவினர் வெளியிட்ட ப்ரோமோ வீடியோ இதோ…