சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.இந்த படத்தில் காயத்ரி,அனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இது விஜய்சேதுபதி , சீனு ராமசாமி இருவரும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக  தென்மேற்கு பருவக்காற்று,இடம் பொருள் ஏவல் ,தர்மதுரை உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றியுள்ளனர்.மாமனிதன் படத்திற்கு இளையராஜா ,யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் தமிழக மற்றும் கேரளா உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியிருந்தார்.

இந்த படம் மே 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.எதார்த்தமான இந்த ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இந்த தொடரை கீழே உள்ள லிங்கில் காணலாம்