"வேகமெடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படப்பிடிப்பு!"- ஸ்பெஷல் அறிவிப்போடு வந்த அசத்தலான புது GLIMPSE இதோ!

ரஜினிகாந்தின் லால் சலாம் பட படப்பிடிப்பு குறித்த தகவல்,super star rajinikanth in lal salaam movie shoot schedule wrap | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக என்றென்றும் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக வழங்கும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இதனை அடுத்து தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குகிறார். மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை அடிப்படையாகக் கொண்ட உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாரான திரைப்படமாகவும் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கும் இத்திரைப்படம் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் அவர்களின் 171 வது திரைப்படமாக தயாராகும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதுகுறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டில் லால் சலாம் திரைப்படத்தின் படப் பூஜை நடைபெற்ற நிலையில் கடந்த (2023) மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "34 நாட்கள் & இந்தக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது." என குறிப்பிட்டு புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 34 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்ட அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

'புத்திசாலித்தனம் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே!'- தனது காதலர் குறித்து மனம் திறந்து ஸ்ருதிஹாசன்... சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'புத்திசாலித்தனம் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே!'- தனது காதலர் குறித்து மனம் திறந்து ஸ்ருதிஹாசன்... சிறப்பு பேட்டி இதோ!

'தியேட்டர் எல்லாம் என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க!'- வெற்றிமாறன் - சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து பேசிய சூரியின் அதிரடி வீடியோ!
சினிமா

'தியேட்டர் எல்லாம் என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க!'- வெற்றிமாறன் - சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து பேசிய சூரியின் அதிரடி வீடியோ!

'வாழ்க்கையில் மறக்கவே முடியாது!'- வேதாளம் படப்பிடிப்பில் அஜித் குமார் உடன் இருந்த அழகிய நினைவுகளை பகிர்ந்த சூரி! வீடியோ உள்ளே
சினிமா

'வாழ்க்கையில் மறக்கவே முடியாது!'- வேதாளம் படப்பிடிப்பில் அஜித் குமார் உடன் இருந்த அழகிய நினைவுகளை பகிர்ந்த சூரி! வீடியோ உள்ளே