நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இயல்பு வாழ்க்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் மக்கள். கடந்த சில நாட்களாகவே திரையுலக பிரபலங்களின் மரண செய்திகள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருந்த 4ஜி பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்தார். அதன் பிறகு கன்னட திரையுலகை சேர்ந்த சிரஞ்ஜீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

Udukkai Director Balamithran Passed Away

தற்போது புதுமுக இயக்குனரான பாலமித்ரன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உடுக்கை என்ற படத்தை இயக்கிவந்தார். இதில் சோகம் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மீதமுள்ள நிலையில் பாலமித்ரன் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Udukkai Director Balamithran Passed Away

உடுக்கை படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகை சஞ்சனா சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனரின் மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். அதில் என்னுடைய உடுக்கை பட இயக்குனரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நல்ல மனிதர் பாலமித்ரன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவு செய்துள்ளார்.