சூர்யா - சிவா கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பான சூர்யா42 பட டைட்டில் வெளியீடு... மிரட்டலான புது GLIMPSE இதோ!

சூர்யா 42 திரைப்படத்தின் மிரட்டலான டைட்டில் வெளியீடு,suriya siva in suriya 42 movie titled kanguva | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க கடைசியாக வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவத் தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்த சூர்யா தொடர்ந்து நடிகர் மாதவன் இயக்குனராக முதல் முறை இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனக்கு முதல் தேசிய விருது பெற்று கொடுத்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கோங்கர இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்திலும் கௌரவ வேடத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது திரை பயணத்தில் 42 ஆவது திரைப்படமாக சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். தனக்கென தனி பாணியில் பக்கா கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகும் சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் UV CREATIONS வழங்க பிரம்மிப்பூட்டும் பீரியட் திரைப்படமாக தயாராகி வரும் சூர்யா 42 திரைப்படத்தை இந்தியாவின் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், சூர்யா 42 திரைப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான புதிய ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ இதோ…
 

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் 16 ஆகஸ்ட் 1947 பட அடுத்த சர்ப்ரைஸ்... கலக்கலான கோட்டிக்கார பயலே வீடியோ பாடல் இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் 16 ஆகஸ்ட் 1947 பட அடுத்த சர்ப்ரைஸ்... கலக்கலான கோட்டிக்கார பயலே வீடியோ பாடல் இதோ!

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பொன்னியின் செல்வன் 2 படக்குழுவின் புது ட்ரீட்... பிரம்மிக்க வைக்கும் PS ANTHEM வீடியோ இதோ!
சினிமா

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பொன்னியின் செல்வன் 2 படக்குழுவின் புது ட்ரீட்... பிரம்மிக்க வைக்கும் PS ANTHEM வீடியோ இதோ!

தனது MAKE-UP MANஐ மேடைக்கு அழைத்து ஸ்பெஷல் பரிசு கொடுத்த ராகவா லாரன்ஸ்... காரணம் என்ன? அசத்தலான வீடியோ இதோ
சினிமா

தனது MAKE-UP MANஐ மேடைக்கு அழைத்து ஸ்பெஷல் பரிசு கொடுத்த ராகவா லாரன்ஸ்... காரணம் என்ன? அசத்தலான வீடியோ இதோ