திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. துணை நடிகையாக திரையில் கால்பதித்து இன்று வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். தமிழ் இண்டஸ்ட்ரியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லியாய் விளங்கி வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளத்தில் தன்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார். "Angel face, Devil thoughts" என அவர் என குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு தற்போது அதிக அளவில் லைக்குகள் குவிந்து வருகிறது.

அந்த புகைப்படத்தில் த்ரிஷா கியூட்டாக இருப்பதாகவும், அப்போது இருந்தது போல தான் தற்போதும் இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். த்ரிஷா தற்போது அமெரிக்காவில் நியூ யார்க்கில் இருந்து தான் இந்த பதிவை போட்டு இருக்கிறார். தற்போது வரை அதிகமான லைக்குகள் இந்த புகைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து சமீபத்தில் தன் பழைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற மாதம் அவர் 7 போட்டோக்கள் தவிர திடீரென மற்ற அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டது பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகி விட்டதா என்று கூட கேள்விகள் எழுப்பினர். ஆனால் அதற்கு விளக்கம் அளித்த த்ரிஷா தன்னுடைய கணக்கு ஹேக் ஆகவில்லை என்றும், ஒரு மாற்றத்திற்காக தான் இப்படி செய்தேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில் அடுத்த சில மாதங்களில் இலங்கையில் ஷூட்டிங் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் த்ரிஷா அரவிந்த் சாமி உடன் இணைந்து நடித்து முடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட பல படங்கள் த்ரிஷா கைவசம் இருக்கின்றன.