விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூலாக இருந்து வருகின்றனர் விக்கி மற்றும் நயன்தாரா. 

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்கள். நயன்தாராவுடன் சேர்ந்து பயணம் செய்வதை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகக் கூறி Go கொரோனா Go என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட நயன்தாராவுடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றார். இருவரும் இறங்கி நடந்து சென்றதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். கொச்சிக்கு சென்ற காதல் ஜோடி தற்போது கோவாவுக்கு சென்றுள்ளது. கோவாவில் நீச்சல் குளம் அருகே நயன்தாரா நடந்து சென்றபோது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த புகைப்படம் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வந்தது. 

அதன் பிறகு நயன்தாரா வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வருங்கால மாமியாரை விக்னேஷ் சிவன் இன்னொரு அம்மாவாக பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு குடும்பங்களும் இப்படி ஒற்றுமையாக இருப்பது நல்ல விஷயம். விக்னேஷ் சிவன் போன்ற காதலர் கிடைக்க நயன்தாரா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து நயன்தாராவின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வந்தார் நயன்தாரா. அந்த படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், குஷ்பு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகவுள்ளது. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.