தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இடியட் ஹாரர் காமெடி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து சிவா நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக மிர்ச்சி சிவா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கும் சுமோ திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் யோகிபாபு உடன் இணைந்து நடித்துள்ள சலூன் மற்றும் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள கோல்மால் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

மேலும் 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக  மிர்ச்சி சிவா யோகிபாபு கருணாகரன் பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த வரிசையில் மிர்ச்சி சிவாவின் அடுத்த நகைச்சுவை சரவெடியாக தயாராகி வரும் திரைப்படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். 

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் டிப்ஸ் தமிழ் இணைந்து வழங்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தை இயக்குனர் விக்னேஷ் ஷா.P.N எழுதி இயக்கியுள்ளார்.சிவாவுடன் இணைந்து கதாநாயகிகளாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடிக்க,பாடகர் மனோ, மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷா ரா,  KPY பாலா, திவ்யா கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஆர்தர்.K.வில்சன் ஒளிப்பதிவில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார் இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின்  முதல் பாடலாக சோறு தான் முக்கியம் பாடல் வருகின்ற மே 25ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போது சோறு தான் முக்கியம் பாடலின் டீசர் வீடியோ தற்போது வெளியானது. அந்த டீசர் வீடியோ இதோ…