மலையாளத் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் டொவினோ தாமஸ், பிரபுவின்டே மக்கள் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து என்னு நின்டே மொய்தின், சார்லி, ஸ்டைல், கோதா, வைரஸ் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கல்கி, ஃபாரன்ஸிக், கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ், களை ஆகிய திரைப்படங்கள் மலையாள சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவர இருக்கும் குரூப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக மலையாளத்தில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகியிருக்கும் மின்னல் முரளி திரைப்படத்தில் மின்னல் முரளி எனும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். வீக்எனட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் ஷான் ரஹ்மான் மற்றும் சுஷில் ஷ்யாம் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகும் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக நெடஃபிலிக்ஸ் OTT தளத்தில் வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.