பிரபல மாடலாக இருந்து தற்போது தமிழ்,தெலுங்கு மொழிகளில் நடிகையாக அசத்தி வருபவர் அக்ஷரா கௌடா.உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது என்ட்ரியை கொடுத்தார் அக்ஷரா.2012-ல் விஜய் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த படம் துப்பாக்கி.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் அக்ஷரா கௌடா.

இதனை தொடர்ந்து 2013-ல் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்த படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலின் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார் அக்ஷரா.தொடர்ந்து போகன்,சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினார் அக்ஷரா.

கன்னடம்,ஹிந்தி மொழிகளிலும் நடித்த இவர் கடந்த வருடம் நாகார்ஜூனா,ரகுல் ப்ரீத் சிங்  நடிப்பில் வெளியான மன்மதுடு 2 படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது என்ட்ரியை கொடுத்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வருகிறார் அக்ஷரா.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர் அக்ஷரா.தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்,சில நேரங்களில் அவர்களுடன் லைவ் மூலம் கலந்துரையாடி அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் அக்ஷரா.தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்