உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், மீதமுள்ள 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்த விசாரணையின் முடிவாக, இன்று இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்தார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு வந்த வழக்கின் முடிவாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர் என லக்னௌ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

மேலும், ``பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை" என்றும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட பட்டவர்களில், 32 பேர் விடுதலை ஆகின்றனர். எனினும் சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அனுமதியிருக்கிறது

வழக்கின் அடிப்படையில், சதித்திட்டம் தீட்டி, பாபர் மசூதியை இடிக்க ஆயிரக் கணக்கானவர்களைத் தூண்டி விட்டதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும், சமூகக் குழுக்களிடையே பகைமையைத் தூண்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக்கி, ஒரே வழக்காக 1993 முதல் சிபிஐ விசாரித்து வந்தது. 

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கட்டிருப்பதால், இன்று அவர்கள் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியதில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அத்வானி உள்ளிட்ட எட்டு பேர் காணொலி காட்சி வாயிலாக, தீர்ப்பு நேரத்தின்போது நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

இந்த வழக்கின் விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை ஏப்ரல் 2017இல் அறிவுறுத்தியிருந்தது. பின்னர் பல முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு, செப்டம்பர் 30, 2020க்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது .

அயோத்தி நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு. சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை செய்து, நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.