இந்த ஆயுத பூஜையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்துடன் இணைந்து திரையின் மறுபக்கம் எனும் மற்றொரு புதிய படம் ரிலீஸ் ஆகிறது. எக்கசக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பக்கா ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக தளபதி விஜயின் லியோ படம் வெளிவருகிறது மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியோடு செய்யப்பட்டிருக்கும் கழுதைப்புலி ஆக்சன் காட்சி தியேட்டரில் பக்கா விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ படம் உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இதே ஆயுத பூஜை வெளியீடாக லியோ படத்துடன் திரையின் மறுபக்கம் என்னும் மற்றொரு புதிய திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் நித்தின் சாம்சன் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரையின் மறுபக்கம் திரைப்படத்தில் மொஹமத் கோஸ் மணிகண்டன் ஹேமா ஜெனிலியா ஸ்ரீ ரிஷா ஜோதி யாசர் சத்யா அண்ணாதுரை ஆகியோருடன் இணைந்து இயக்குனர் சாம்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நித்தின் சாம்சன். இயக்குனர் நித்தின் சாம்சன் ஒளிப்பதிவில், நிஷாந்த்.JNS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த திரையின் மறுபக்கம் திரைப்படத்திற்கு அணில்.NC இசை அமைத்திருக்கிறார் ரித்விக் மாதவன்.JKV பின்னணி இசை சேர்த்திருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி.அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார். இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார். இயக்குனர் செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கி விட்டு படத்தின் ஹிரோ ,துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார்.அன்பரசியின் கழுகுப்பிடியிலிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா ..? படத்தை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார் என்பதே கதை. திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை.இப்படத்தை நிதின் சாம்சன் (Nitin Samson ) இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை,திரைக்கதை, வசனம் ,தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.சென்னை,செங்கல்பட்டு,அமெரிக்கா(புளோரிடா) ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார்.அக்டோபர் 20 ந்தேதி முதல் தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் ரீலீசாகிறது.