மாஸ்டர் பாடல்கள் படைத்த மாஸ் சாதனை ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | June 27, 2021 18:53 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியான முதல் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தன,பல தளங்களில் பல சாதனைகளை படைத்திருந்தன.தற்போது Spotify தளத்தில் இந்த படத்தின் பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அந்த தளத்தில் இதனை செய்யும் முதல் தமிழ் பட ஆல்பம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது,இதனை ரசிகர்கள் உற்சாகமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#Master Album hits 100M+ Streams on Spotify collectively!
Also, the First Tamil Album to hit 100M Streams on Spotify! 🤩
Yet another Record created! 🔥
Congratulations Rockstar @anirudhofficial 🎊 pic.twitter.com/XsTr1fAz6m— Anirudh Music Forever ✨ (@AnirudhMusicFvr) June 26, 2021