தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட பிளாக்பஸ்டர் சம்பவம் உறுதி!- முதல் விமர்சனம் கொடுத்த அனிருத்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜயின் லியோ பட முதல் விமர்சனம் கொடுத்த அனிருத்,thalapathy vijay in leo movie first review by anirudh | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்து கொண்டார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகள், ACTION PACKED சேசிங் காட்சிகள், மிரள வைக்கும் CG-ல் கழுதைப்புலி உடனான ஒரு மிரட்டலான சண்டைக் காட்சி என மொத்த படம் எப்படி இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தெள்ளத் தெளிவாக காட்டி இருக்கிறது. இதுவரை தளபதி விஜயின் திரை பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அறிவித்த படக்குழுவினர் கிட்டத்தட்ட 25,000 முதல் 30,000 திரையரங்குகளில் உலகம் முழுக்களையோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருக்கின்றனர். எனவே லியோ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

 சமீபத்தில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ திரைப்படத்தில் வழக்கமான தளபதி விஜய் திரைப்படங்களில் இருப்பது போல பன்ச் வசனங்களோ ஓப்பனிங் பாடலோ ஓப்பனிங் சண்டை காட்சியோ கிடையாது என தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. லியோ திரைப்படத்தின் சென்சார் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்ட மிக்சிங் பணிகளில் இசையமைப்பாளர் அனிருத் பணியாற்றி வருகிறார். இதனிடையே தற்போது லியோ திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை அனிருத் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் மிக்ஸிங் பணிகளில் பணியாற்றியபோது "Jailer 💥💥💥🏆🏆🏆🙌🙌🙌" என அனிருத் தனது X பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுபோலவே படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை குறிப்பிட்டு தனது X பக்கத்தில், "#Leo 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆" என அனிருத் குறிப்பிட்டிருப்பதால் லியோ திரைப்படமும் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும் என அனிருத் தெரிவித்திருப்பதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இன் அந்தப் பதிவு இதோ…
 

Jailer 💥💥💥🏆🏆🏆🙌🙌🙌

— Anirudh Ravichander (@anirudhofficial) August 4, 2023

#Leo 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆

— Anirudh Ravichander (@anirudhofficial) October 9, 2023