தமிழ் சினிமா ரசிகர்களின் “தல” அஜித்தின் அடுத்த திரைப்படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து வலிமை படத்தில் மீண்டும் அஜித்-H.வினோத் கூட்டணி இணைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாதிரி பாடலும் ரசிக்க வைத்தது. இந்நிலையில் தல அஜித்தின் மற்றொரு பாடல் யூ டியூபில் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் எமோஷனல் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது.  இத்திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமான்  விஸ்வாசம் படத்திற்காக முதல் முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார் .

முன்னதாக விசுவாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே லிரிக்கல் வீடியோ மற்றும் வீடியோ பாடல் 100 மில்லியனை தொட்ட நிலையில் தற்போது அடிச்சுதூக்கு பாடலும் 100 மில்லியனை எட்டியுள்ளது. அடுத்ததாக ஆலுமா டோலுமா வீடியோ பாடலும் 95 மில்லியன் எட்டியுள்ள நிலையில் விரைவில் இப்பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.