பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து இன்று (ஆகஸ்ட் 13-ஆம் தேதி) வெளியான  திரைப்படம் நெற்றிக்கண். மிரட்டலான வில்லனாக நடிகர் அஜ்மல் நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை அவள் திரைப்படத்தின் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்குகிறார். இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்க R.D.ராஜசேகர் நெற்றிக்கண் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சீரியல் கில்லர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 13-ஆம் தேதி) நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது.முன்னதாக கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் இதுவும் கடந்து போகும் என்னும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இதுவும் கடந்து போகும் பாடலின் புதிய வெர்ஷனாக இதுவும் கடந்து போகும் ரீப்ரைஸ் பாடல் வெளியாகி உள்ளது. சர்ப்ரைஸ்ஸான இந்தப் பாடலை புகழ்மிக்க கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீயின் இனிமையான குரலில் ஒலிக்கும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.