ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் வலிமை என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் பிரதமர் தொடங்கி, முதல்வர், விளையாட்டு பிரபலங்கள் என பலரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்

இதையடுத்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோஷன்ஸ் வரும் மே 1-ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவியப்பை வெளியிட்டனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தல அஜித் ரசிகர்கள். 

தல அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் வெறித்தன வெயிட்டிங்கில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அஜித்தின் ஓபனிங் பாடலை முடித்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் குத்துப் பாடலாக அமைந்திருப்பதாகவும் ஒடிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பணியாற்றி இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.