தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது அண்ணாத்த திரைப்படம்.

முதல்முறையாக சூப்பர் ஸ்டாரை இயக்கும் இயக்குனர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பில், தேசிய விருது பெற்ற டி.இமான் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் டி.இமான் இசையில், அண்ணாத்த படத்திலிருந்து வெளிவந்த நான்கு பாடல்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் மாஸ்ஸான ட்ரெய்லர் நாளை (அக்டோபர் 27) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.