சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் கிரிஜாஸ்ரீ.ஜெயா டிவியில் ஒளிபரப்பான தாய் மண்ணின் சுவாமிகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் தொகுப்பாளராக அறிமுகமானார் கிரிஜா ஸ்ரீ.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கினார் கிரிஜா.

தொடர்ந்து சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கிரிஜா.இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.அடுத்ததாக கேப்டன் டிவியில் ஒளிபரப்பானா அந்தரங்கம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் கிரிஜா ஸ்ரீ.

அந்தரங்கம் தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் பிரபல தொகுப்பாளினியாக உருமானினார்.தொடர்ந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது திறமையை நிரூபித்து வந்தார் கிரிஜா ஸ்ரீ.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் கிரிஜா ஸ்ரீ அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவருக்கு கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முத்துராஜ் என்பவருடன் கோலாகலமாக நடைபெற்றது.தற்போது தான் கர்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் கிரிஜா.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.