தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு பிறகு வெளியான முதல் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனாவிற்கு பிறகு வெளியான திரைப்படங்களில் மக்களை திரையரங்கிற்கு ஈர்க்கும் படமாக மாஸ்டர் இருந்திருக்கிறது என்று பல திரையரங்க உரிமையாளர்களும் தெரிவித்திருந்தனர்.

நேற்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நேரடியாக OTT-யில் வெளியாக பெரிய தொகைக்கு மாஸ்டர் படத்தை கேட்டபோதும் திரையரங்குகளில் வெளியிட திடமாக இருந்த விஜய்க்கு பல திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.விஜயின் நல்ல மனத்திற்கேற்ப மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் முதல் படமாக மாஸ்டர் வெளியிடப்படும் என்று ரோகினி திரையரங்கத்தை சேர்ந்த ரேவந்த் தெரிவித்துள்ளார்.கொரோனா இரண்டாம் அலை காரணாமாக கடந்த சில மாதங்காளாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.