தங்கலான் -  கங்குவா வரிசையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

தங்கலான் -  கங்குவா வரிசையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்,studio green next 6 big projects after thangalaan and kanguva | Galatta

சீயான் விக்ரமின் தங்கலான் மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்க ஸ்டூடியோ க்ரீன்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளாக களமிறங்கினார். தொடர்ந்து கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான பருத்திவீரன் தொடங்கி, வரிசையாக கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நடிகர் சூர்யா நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான சிங்கம் படத்தில் தொடங்கி மாசு என்கிற மாசிலாமணி, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் கங்குவா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. இதுபோக டார்லிங், இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி, நோட்டா, மகாமுனி உள்ளிட்ட படங்களையும் தயாரித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பத்து தல.

இந்த வரிசையில் அடுத்ததாக தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்க 1800 களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெறும் வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மிபூட்டும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக மிகப்பெரிய பொருட்ச அளவில் உருவாக்கப்படும் கங்குவா திரைப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து இதே போன்று பிரம்மாண்டமான படைப்புகளை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் அவரது திரைப்பயணத்திலேயே மிக முக்கிய படமாக அமைய இருக்கும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “ஞானவேல் ராஜா சார் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார் அடுத்தடுத்த கட்டமாக பெரிய திரைப்படங்களை திட்டமிட்டு இருக்கிறார்.” என தெரிவித்த அவரிடம், “மற்றொரு பெரிய பிரம்மாண்ட படத்தை ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன” என கேட்டபோது, “அது ஒரு பெரிய படம் அது குறித்து அறிவிப்பு வெகு விரைவில் வரும் நான் எதுவும் சொல்ல கூடாது. அதைத்தொடர்ந்து அடுத்து இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்களை திட்டமிட்டு இருக்கிறார். அடுத்த 2024 ஆம் ஆண்டு பார்த்தீர்கள் என்றால் தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஆறு படங்களாவது வரும்.” என தனஜெயன் அவர்கள் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

வெங்கட் பிரபுவின் பொறுமையை சோதித்த நாக சைதன்யா... கஸ்டடி படத்தின் கலகலப்பான ப்ரொமோஷன் வீடியோ இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் பொறுமையை சோதித்த நாக சைதன்யா... கஸ்டடி படத்தின் கலகலப்பான ப்ரொமோஷன் வீடியோ இதோ!

ஆஸ்கார் உட்பட 9 சர்வதேச பட விழாக்களில் பா.ரஞ்சித் - சீயான் விக்ரமின் தங்கலான்… ரகசியத்தை உடைத்த KEஞானவேல் ராஜா! வைரல் வீடியோ
சினிமா

ஆஸ்கார் உட்பட 9 சர்வதேச பட விழாக்களில் பா.ரஞ்சித் - சீயான் விக்ரமின் தங்கலான்… ரகசியத்தை உடைத்த KEஞானவேல் ராஜா! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவிலேயே இது பெரிய BENCHMARK!- சூர்யாவின் கங்குவா படைத்த அதிரடி சாதனை... KEஞானவேல் ராஜாவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

தமிழ் சினிமாவிலேயே இது பெரிய BENCHMARK!- சூர்யாவின் கங்குவா படைத்த அதிரடி சாதனை... KEஞானவேல் ராஜாவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!