“அடிபோலி.. “ தளபதி விஜயின் லியோ படம் குறித்து மேத்திவ் தாமஸ் பகிர்ந்த தகவல்.. விவரம் உள்ளே..

லியோ படம் குறித்து நடிகர் மேத்திவ் தாமஸ் தகவல் விவரம் இதோ - Mathew Thomos about Thalapathy Vijay Leo | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்ப்பார்த்து நிற்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடிகர்கள் திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் மாதக்கணக்கில் படமாக்கப் பட்டது. அந்த படப்பிடிப்பில் ஷெட்டியூலை முடித்து சென்னை, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கவுள்ளது.

படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்து வந்துள்ளது. காரணம் லோகேஷ் கனகராஜின் தனி சிறப்பு பிரிவு LCU எனப்படும் பட்டியலில் லியோ திரைப்படம் இடம் பெறுமா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் வேலைகள் முடிந்து வரும் ஆயுத பூஜை தினத்தையொட்டி உலகமெங்கும் மிகப்பெரிய ரிலீஸாக வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் இப்படத்தில் நடித்து வரும் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்திவ் தாமஸ் அவரது அடுத்த மலையாள திரைப்படமான ‘நெய்மர்’ படத்தின் வெளியீட்டிற்காக விளம்பர வேலையில் இறங்கியுள்ளார். அதன்படி அப்படி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் மேத்திவ் தாமஸ் அவரிடம் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

நான் முதலில் பயப்பட்டேன். நான் லோகேஷ் கனகராஜ் சாரிடம் எனது சிரமங்களை எடுத்துரைத்து, எனது நிலையை புரியவைத்தேன். எனக்கு தமிழ் தெரியாது என்று நான் அவரிடம் தொடர்ந்து கூறுவேன். ஆனால் லோகேஷ் சார் எனக்கு நிறைய நேரம் கொடுத்தார், மேலும் அவர் செட்டில் நிறைய ஆறுதல் அளித்தார், அதனால் நடிப்பது எளிதாகிவிட்டது. என்றார் நடிகர் மேத்திவ் தமாஸ். மேலும் லோகேஷ் கனகராஜின் LCU வில் பங்கெடுப்பது எப்படி இருக்கு என்ற கேட்கையில் மேத்திவ் சிரித்தபடி “அடிபோலி” (சிறப்பாக உள்ளது) என்றார். பின் அவர் இயல் என்ற சிறுமியின் அண்ணனாக நடிக்கவுள்ளார் என்பதை பகிர்ந்து கொண்டார். காதலில் சொதப்புவது எப்படி, டிக் டிக் டிக் மற்றும் வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் நடித்த நடிகர் அர்ஜுனன் அவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து வெளியான தகவல்கள் இணையத்தில் விஜய் ரசிகர்களால் வைரலாகி  வருகிறது

சினிமா

"வந்தியதேவன் குதிரை சத்தம் இப்படிதான் உருவானது.." பொன்னியின் செல்வன் படம் குறித்து ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்த தகவல் - Exclusive Interview இதோ..

ஏ ஆர் ரகுமான் பாடும்போது மேடையேறிய போலீஸ்.. பாதியில் நின்ற கான்செர்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஏ ஆர் ரகுமான் பாடும்போது மேடையேறிய போலீஸ்.. பாதியில் நின்ற கான்செர்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..

“அவர் தங்கமானவர்..” ரஜினிக்கு ஆதரவாக நின்ற சந்திரபாபு நாயுடு.. விமர்சனத்திற்கு பதிலடி – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அவர் தங்கமானவர்..” ரஜினிக்கு ஆதரவாக நின்ற சந்திரபாபு நாயுடு.. விமர்சனத்திற்கு பதிலடி – வைரலாகும் பதிவு இதோ..