"நான் இன்னும் கர்ப்பமாகவில்லை!"- திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு டாப்ஸியின் நகைச்சுவையான பதில்! விவரம் உள்ளே

திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு டாப்ஸியின் நகைச்சுவையான பதில்,Taapsee funny reply to fan on instagram about her marriage | Galatta

இன்ஸ்டாகிராமில் #AskMeAnything என்ற ஹேஷ்டேகில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நடிகை டாப்ஸி, ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு நான் இன்னும் கர்ப்பமாகவில்லை என மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்து இருக்கிறார். தனக்கென தனி பாணியில் தரமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை டாப்ஸி. கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்ஸி 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி தேசிய விருதுகள் வென்ற ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஜீவாவின் வந்தான் வென்றான், அஜித் குமாரின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதையின் நாயகியாக டாப்ஸி நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த நடிகை டாப்ஸி தொடர்ந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து நட்சத்திர நாயகியாக உயர்ந்தார். அந்த வகையில் பாலிவுட்டில், அமிதாப் பச்சன் உடன் இணைந்து டாப்ஸி நடித்த பின்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த பின்க் திரைப்படம் தமிழில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க நேர்கொண்ட பார்வை என ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது. கடந்த 2022 ஆம் ஆண்டில் லூப் லபேட்டா, மிஷன் இம்பாசிபிள், சபாஷ் மித்து (கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் படம்), தோபாரா, தட்கா மற்றும் பிளர் ஆகிய 6 திரைப்படங்கள் டாப்ஸி நடிப்பில் வெளிவந்தன.

இந்த 2023 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வோ லட்கி ஹய் கஹான், ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் டாப்ஸி இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் டன்கி படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ASK ME ANYTHING-ல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நடிகை டாப்ஸிடம் ரசிகர் ஒருவர் அவருடைய திருமணம் குறித்து கேட்ட போது, டாப்ஸி சிரிப்பை அடக்க முடியாமல் நகைச்சுவையாக பதில் அளித்தார். “எப்போது நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்? நான் இன்னும் கர்ப்பமாகவில்லை… எப்போது வேண்டுமானாலும் ஆகலாம் அப்போது நான் சொல்கிறேன்.” என நகைச்சுவையாக பதில் அளித்து இருக்கிறார். டாப்ஸியின் அந்த ஸ்டேட்டஸின் புகைப்படம் இதோ…
vijay antony in kolai movie final trailer out now ritika singh

தியேட்டரில் வெற்றி பெற்ற மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட OTT வெளியீடு எப்போது?- அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

தியேட்டரில் வெற்றி பெற்ற மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட OTT வெளியீடு எப்போது?- அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

உலகப் புகழ்பெற்ற பேலசில் ஆஸ்கார் வின்னர் MM.கீரவாணி - வைரமுத்து - KT.குஞ்சுமோன்... ஜென்டில்மேன் 2 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

உலகப் புகழ்பெற்ற பேலசில் ஆஸ்கார் வின்னர் MM.கீரவாணி - வைரமுத்து - KT.குஞ்சுமோன்... ஜென்டில்மேன் 2 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!

சினிமா

"பாக்ஸ் ஆபிஸ் புல்டோசர்!"- ரிலீசுக்கு முன்பே ஆல் டைம் ரெகார்ட் படைத்த பிரபாஸின் சலார்... வேற லெவல் மாஸ் அறிவிப்பு இதோ!