2019 டிசம்பரில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த படம் சில்லுக்கருப்பட்டி.பூவரசம் பீப்பீ படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இந்த படத்தையும் இயக்கியிருந்தார்.டிவைன் ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Suriya Jyothika Appreciates Team Sillu karupatti

சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை விநியோகம் செய்திருந்தனர்.சமுத்திரக்கனி,சுனைனா,மணிகண்டன்,நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Suriya Jyothika Appreciates Team Sillu karupatti

இந்த படம் 50 நாட்களை கடந்ததை ஒட்டி சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து சில்லுக்கருப்பட்டி குழுவினரை அழைத்து, தங்கள் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.மேலும் இயக்குனருக்கு ஒரு ஆப்பிள் லேப்டாப்பும் பரிசாக வழங்கியுள்ளனர்.இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.