சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Celebrate Fan Birthday Doctor

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Celebrate Fan Birthday Doctor

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் சமீபத்தில் தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு இடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது குட்டி ரசிகையின் பிறந்தநாளை டாக்டர் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்