தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும் சிறந்த நடிகராக விளங்கும் நடிகர் சூர்யா. தற்போது சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில்  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வெளிவருகிறது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் T.J.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யாவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் ராஜிஷா விஜயன், லிஜோ மொள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர்  நடிக்க, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸாகிறது. இந்நிலையில் தற்போது ஜெய்பீம் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த முக்கிய தகவல் வெளியானது.

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு "A"  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மொத்த நீளம் 164.44 நிமிடங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் ஜெய்பீம் படத்தின் டீஸர் & ட்ரெய்லர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
suriya jaibhim certified with a in censor and length of movie revealed