IND vs PAK T20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணியை ஹர்பஜன் சிங் முன்பே எச்சரித்து இருந்தபோதிலும், அணித் தேர்வின்போதே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, அணித் தேர்வு பற்றிய விமர்சனங்கள் கேப்டன் விராட் கோலியைச் சுற்றத் தொடங்கி இருக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்து உள்ளது.

இந்த போட்டியில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் கைவிட்ட போதிலும், கிங் கோலியின் க்ளாசிக் ஆட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருந்து. என்றாலும், டி20 உலககோப்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு முன்பே இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் இந்த போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக முன் வைத்து வந்தார். 

அதில், பாகிஸ்தான் அணியைப் பற்றி நிறைய பேசியிருந்தார். அதன்படி, “பாகிஸ்தான் அணி எப்போதும் கணிக்க முடியாத ஒரு அணியாகவே இருந்து வருகிறது என்றும், பாகிஸ்தான் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்” என்றும், அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். 

ஏனெனில், கடந்த கால சாதனைகள் மீது நாம் கவனம் செலுத்தக் கூடாது என்பதை நினைக்கிறேன் என்றும், தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அத்துடன், “இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தற்போது அதிகப்படியான போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடவில்லை என்றும், இதன் காரணமாக அதை வைத்து எதையும் நாம் கூற முடியாது என்றும், போட்டி நாளன்று என்ன நடக்கிறதோ? அது தான் இறுதி” என்றும், அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார். 

“நம்முடைய அணி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்றும், பாகிஸ்தான் அணியை நம்மால் எளிதில் வீழ்த்த முடியும்” என்றும், அவர் கூறியிருந்தார்.

மேலும், “ஒரு அணி மற்ற அணியை வீழ்த்துவது என்பது களத்தில் நடைபெறும் செயல்பாடுகளைப் பொருத்தது தான் என்றும், அதே போன்று பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என்பதால், இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும், தனது சார்பில் ஹர்பஜன் அணியை எச்சரித்து இருந்தார்.

அவர், அச்சரித்தது போலவே, பாகிஸ்தான் அணி மிக எளிதாக 17.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் கூட இழப்பு இல்லாமல், 152 ரன்களை மிக எளிதாக எட்டிப்பிடித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இது வரை உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்கிற மிகப் பெரிய வரலாற்று சாதனையை, இந்த முறை பாகிஸ்தான் அணி தற்போது இந்திய அணியை வென்றதன் மூலமாக அதனை மாற்றி எழுதியது.

முக்கியமாக, உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராய் தோற்ற முதல் கேப்டன் என்கிற விமர்சனமும் புதிதாய் விராட் கோலியின் தலையில் சூடிக்கொண்டுள்ள. 

அதே நேரத்தில், உலகிலேயே சவாலான டி20 போட்டிகளில் ஆடும் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, யு.ஏ.இ.யில் கடந்த ஓராண்டில் அதிகம் விளையாடிய வீரர்களைக் கொண்ட இந்திய அணி என்று ஏகப்பட்ட ப்ளஸ்களைக் கொண்ட இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றது பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

குறிப்பாக, இந்திய அணியின் தோல்விக்கு “அணித் தேர்வின் போதே ஏற்பட்ட சலசலப்புதான்” காரணம் என்கிற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

“பௌலிங் பயிற்சியே மேற்கொள்ளாத ஹர்திக்கை பாண்டியாவை, ஆல்ரவுண்டர் இடத்தில் ஆட விடுவது ஏன்?” என்றும், கேள்விகள் எழுந்து உள்ளது.

அதே போல், “5 பௌலிங் ஆப்ஷன்களோடு களமிறங்குவது என கேப்டன் கோலி, மென்டர் தோனி, கோச் ரவி சாஸ்திரி இவர்கள் அனைவரின் முடிவுகளும் தான் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. 

என்றாலும், இந்திய அணியின் தோல்விக்கு அதிகமான பழி பாவமானது, வழக்கம் போல் கேப்டன் கோலிக்கே வந்து சேர்ந்து உள்ளது.  

பாகிஸ்தான் அணியிடம் இந்த முறை தோற்றாலும், இந்த உலக கோப்பை எப்படியாவது வென்று, இந்த கடுமையான  விமர்சனக்கணைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி விராட் கோலி வைக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் ஆவலோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, “உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல” என்று, இந்திய கேப்டன் விராட் கோலி, கோப்பையை வெல்வோம் என்கிற ரீதியில் புதிய நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.