சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தனர். 

Suriya and Jyotika Gift Apple Laptop To Ponmagal Vandhal Director Fredrick Suriya and Jyotika Gift Apple Laptop To Ponmagal Vandhal Director Fredrick

ரசிகர்களின் பார்வையிலும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது இப்படம். நீதிக்காகப் போராடும் ஒரு பெண் வழக்கறிஞராக தனது பாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தியிருந்தார் ஜோதிகா. அழுகை, வலி, உறுதி, துணிச்சல், அன்பு என உணர்வுகளை உன்னதமாக திரையில் கொண்டு வந்தார். 

Suriya and Jyotika Gift Apple Laptop To Ponmagal Vandhal Director Fredrick Suriya and Jyotika Gift Apple Laptop To Ponmagal Vandhal Director Fredrick

ஓடிடி-ல் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம். ஜோதிகாவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது. ஊரடங்கிலும் உற்சாக வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை இயக்குனர் ஜே.ஜே. ப்ரட்ரிக்குடன் கொண்டாடி மகிழ்ந்தனர் சூர்யா மற்றும் ஜோதிகா. அதுமட்டுமல்லாமல் இயக்குனருக்கு ஆப்பிள் மேக்புக்கை பரிசளித்துள்ளனர். பரிசுடன் இருந்த கடித்தத்தில், 2டி நிறுவனத்திற்காக அழகான படத்தை தந்ததற்கு நன்றி. உங்களுடைய ஒவ்வொரு படமும் பெருமைமிக்கதாக இருக்கும் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.