நேற்று இந்தியாவையே சோகமாக்கிய ஒரு செய்தி 34 வயதான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை.தோனி படத்தின் மூலமாக நாடு முழுவதும் பிரபலமான நடிகராக மாறிய இவர் இப்படி செய்துகொள்ள காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Kangana Ranaut Angry Over Bollywood and media for Sushant Singh Rajput death

இவரது மரணம் குறித்து பல மீடியாக்களில் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.பல பிரபலங்களும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.சுஷாந்தின் மறைவு குறித்து நடிகை கங்கனா ரனாவத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Kangana Ranaut Angry Over Bollywood and media for Sushant Singh Rajput death

அதில் பாலிவுட் இண்டஸ்ட்ரி மற்றும் மீடியா மீது கடுமையான விமர்சனங்களை அவர் தெரிவித்துள்ளார்.ஸ்டான்போர்ட் யூனிவெர்சிட்டிக்கு scholarship கிடைத்த ஒருவரை எப்படி மனநல பிரச்சனைகள் கொண்டவர் என்று எப்படி கூறலாம் என்று தொடங்கியவர்.சுஷாந்தின் நடிப்பு பல நேரங்களில் பாராட்டப்படாமல் போனது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.சுஷாந்த் ரசிகர்களிடம் தனக்கு துணையாக யாரும் இல்லை என்று ரசிகர்களிடம் கூறியதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.தன்னுடைய படங்களுக்கும் இது நடந்துள்ளது என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.சுஷாந்தின் போதை பழக்கம் உடையவராக இருக்கலாம் என்று எழுதும் மீடியாக்கள் ஏன் சஞ்சய் தத் பற்றி எழுதுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.சில மீடியாக்கள் தன்னிடமும் சுஷாந்த்தை போல முடிவெடுக்க உள்ளீர்களா என்று அவரகள் ஐடியாவை என் மீதும் திணிக்கின்றனர்.சுஷாந்த் செய்த ஒரே தவறு அவரது அம்மா கூறியதை மறந்துவிட்டு அவரை உதாசீனப்படுத்தியவர்களின் பேச்சுக்களை எடுத்துக்கொண்டது தான் என்று தெரிவித்துள்ளார்.