டாணா படத்திற்கு பிறகு வைபவ் நடிப்பில் உருவாகிய திகில் திரைப்படம் காட்டேரி. வித்தியாசமான திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தை டீகே இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஹாரர் காமெடி படமான யாமிருக்க பயமே படத்தை இயக்கினார். 

Vaibhav Katteri First Single Enperu Enna Kelu Lyric Video

இதில் வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பாஜ்வா, கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Vaibhav Katteri First Single Enperu Enna Kelu Lyric Video Vaibhav Katteri First Single Enperu Enna Kelu Lyric Video

ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிளான என் பேரு என்ன கேளு பாடல் தற்போது வெளியானது. ஜோனிதா காந்தி மற்றும் மரியா ராய் வின்சென்ட் பாடிய இந்த பாடல் வரிகளை ஸ்ரீகாந்த் வரதன் எழுதியுள்ளார். அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.