லால் சலாம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொலிடிகல் ஸ்போர்ட்ஸ் படம்... பொங்கல் ரிலீஸை உறுதிப்படுத்திய படக்குழு! முக்கிய அறிவிப்பு இதோ

ரஜினிகாந்தின் லால் சலாம் ரிலீஸை உறுதிப்படுத்திய படக்குழு,superstar rajinikanth in lal salaam crew affirms the 2024 pongal release | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே 2024 பொங்கல் வெளியீடாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏலியன் சயின்ஸ்ஃபிக்ஷன் படமான அயலான் திரைப்படமும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்க ஹிந்தியில் தயாராகி இருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படமும் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த படத்திற்கும் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் உறுதியாக 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்களது X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், "லால் சலாம் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகிறது" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். லால் சலாம் படக்குழுவினரின் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

 

As we put the final touches in post-production, we would like to affirm #LalSalaam 🫡 is coming to screens this PONGAL 2024 ☀️

Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada! In Cinemas 📽️ PONGAL 2024 Worldwide ☀️🌾@rajinikanth @ash_rajinikanth @arrahmanpic.twitter.com/1PPBmW0AUk

— Lyca Productions (@LycaProductions) November 22, 2023

தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முதல்முறையாக மொய்தின் பாய் எனும் சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் மேலும் செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனிக்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் கபில் தேவ் அவர்கள் முக்கியமான ஒரு சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.  விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் லால் சலாம் திரைப்படத்தின் முழு டப்பிங்கையும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிறைவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டை மையப்படுத்திய அதிரடியான பொலிடிகல் திரில்லர் படமான லால் சலாம் திரைப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியானது. ரசிகர்களுக்கு தீபாவளியில் ஸ்பெஷல் விருந்தாக வெளிவந்த லால் சலாம் படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.