ரஜினிகாந்தின் ஜெயிலர் அலப்பறை: உலகின் என்டர்டெயின்மென்ட் தலைநகரத்தில் சூப்பர் ஸ்டார்... மாஸ் அறிவிப்பு இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட புதிய மாஸ் அறிவிப்பு,superstar rajinikanth in jailer promotions at aria resorts of casino las vegas | Galatta

தனக்கென தனி ஸ்டைலில் பக்கா டாட் காமெடி மாஸ் என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பக்கா மாஸ் அறிவிப்பு ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாக தொடர்ந்து தனது ஸ்டைலால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் மிக முக்கிய கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

முன்னதாக தனது 170-வது திரைப்படமாக ஜெய் பீம் படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 171 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க இருப்பதாக தெரிகிறது. இந்த தலைவர் 171 திரைப்படத்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. உலகம் முழுக்க ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் ஆகும் ப்ரோமோஷன் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி அமெரிக்காவில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. அதனை முன்னிட்டு உலகின் என்டர்டைன்மென்ட் தலைநகரமாக விளங்கும் லாஸ் வேகாசில் Aria Resort மற்றும் கேசினோ ஆகிய பகுதிகளில் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை ஜெயிலர் திரைப்படத்தின் பிரமோஷன் இடம் பெற உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த அந்த அதிரடியான அறிவிப்பை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

After New York, #Jailer fever to take over Las Vegas💥 Thalaivar fans get ready🔥#JailerinLasVegas@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficialpic.twitter.com/qd7cKOUwuN

— Sun Pictures (@sunpictures) August 6, 2023

மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஜெயிலர் SHOWCASE ட்ரெய்லரில் இல்லாதது ஏன்?- உண்மையை உடைத்த பிரபல நடிகர்! வைரல் வீடியோ
சினிமா

மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஜெயிலர் SHOWCASE ட்ரெய்லரில் இல்லாதது ஏன்?- உண்மையை உடைத்த பிரபல நடிகர்! வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவகார்த்திகேயன்... கேமியோ உண்மையா?- ஜெயிலர் பட நடிகரின் சுவாரஸ்யமான பதில் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவகார்த்திகேயன்... கேமியோ உண்மையா?- ஜெயிலர் பட நடிகரின் சுவாரஸ்யமான பதில் இதோ!

மணிப்பூர் மக்களுக்காக உதவ முன்வந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா... குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே
சினிமா

மணிப்பூர் மக்களுக்காக உதவ முன்வந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா... குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே