அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவான நண்பன் பட நாயகி இலியானா... பெயரை அறிவித்து வெளியிட்ட முதல் புகைப்படம் இதோ!

நண்பர் பட நடிகை இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது,Nanban actress ileana d cruz blessed with baby boy | Galatta

நண்பன் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை இலியானாவிற்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கும் நடிகை இலியானாவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நமது கலாட்டா குழுமமும் நடிகை இலியானாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவதாஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இலியானா, தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்த பிளாக்பஸ்டர் ஹிட்டான போக்கிரி திரைப்படத்தில் கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்தார். இந்த போக்கிரி திரைப்படம் தமிழில் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க அதே பெயரில் போக்கிரி என்றும் ஹிந்தியில் சல்மான் கான் அவர்கள் நடிக்க வாண்டட் என்றும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதே 2006 ஆம் ஆண்டில் தமிழில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்த கேடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தமிழ் சினிமாவிலும் களமிறங்கினார் இலியானா.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது கன்னடம் , ஹிந்தி என தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரம் நாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்து இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகிகளில் ஒருவராக உயர்ந்த நடிகை இலியானா தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அடுத்தடுத்து பாலிவுட்டில் பர்ஃபி, ரஷ்டம், முபாரகண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை இலியானா கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளிவந்த தி பிக் புல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மீண்டும் ஹிந்தியில் நடிகை இலியானா நடிப்பில் தயாராகி இருக்கும் அன்ஃபேர் அண்ட் லவ்லி திரைப்படம் நிறைவடைந்த ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், இலியானாவின் மற்றொரு படமான லவ்வர்ஸ் என்னும் திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற வருகின்றன. 

இதனிடைய கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தனது திருமணத்தை வெளியான அறிவித்த நடிகை இலியானா டி க்ருஸ், மைக்கேல் டவுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சமீபத்தில் தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை நடிகை இலியானா உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தற்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை இலியானா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியான வெளியான KOA PHOENIX DOLAN என பெயரிடப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். மேலும் அந்த பதிவில், “எங்களுடைய அன்பான மகனை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை சொல்ல வார்த்தைகளே இல்லை” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் நடிகை இலியானா பதிவிட்ட அவரது மகனின் அழகிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவகார்த்திகேயன்... கேமியோ உண்மையா?- ஜெயிலர் பட நடிகரின் சுவாரஸ்யமான பதில் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவகார்த்திகேயன்... கேமியோ உண்மையா?- ஜெயிலர் பட நடிகரின் சுவாரஸ்யமான பதில் இதோ!

மணிப்பூர் மக்களுக்காக உதவ முன்வந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா... குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே
சினிமா

மணிப்பூர் மக்களுக்காக உதவ முன்வந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா... குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ பட ஸ்பெஷல் ட்ரீட்... மிரட்டலான ஆண்டனி தாஸ் GLIMPSE SOUNDTRACK இதோ!
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ பட ஸ்பெஷல் ட்ரீட்... மிரட்டலான ஆண்டனி தாஸ் GLIMPSE SOUNDTRACK இதோ!