அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது நாளை வழங்கப்படுகிறது. மேலும் அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகிறது.

முதல்முறையாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ஜாக்கி ஷெராப், ஜார்ஜ் மரியான், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் அண்ணாத்த படத்தை தயாரித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள சூப்பர் ஸ்டாரின் அதிரடி ஃபேமலி என்டர்டெய்னர் திரைப்படமான அண்ணாத்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான அண்ணாத்த படத்தின் “அண்ணாத்த... அண்ணாத்த…” , “சார காற்றே” , “மருதாணி” உள்ளிட்ட பாடல்களும் டீசரும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டீசரில் இடம்பெற்ற “வா..சாமி…” என்னும் அதிரடி பாடல் தற்போது வெளியானது. சூப்பர் ஸ்டாரின் மிரட்டலான “வா..சாமி…”  பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.