"தலைவர் வரார்!"- அதிரடியாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம்ம மாஸ் வீடியோ இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,super star rajinikanth jailer movie release date announcement | Galatta

கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலான நடிப்பால் வசீகரித்து, இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக, என்றென்றும் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரை பயணத்தில் 170வது திரைப்படமாக நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் விதமாக ஜெயிலர் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். 

படையப்பா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன், நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும், ஜெயிலர் திரைப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சர்ப்ரைஸான டீசர் ஒன்றையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பக்கா மாஸான அந்த வீடியோ இதோ…
 

#Jailer is all set to hunt from August 10th💥 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 #JailerFromAug10 pic.twitter.com/Wb7L0akJ4k

— Sun Pictures (@sunpictures) May 4, 2023

சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம்... தமிழகத்திலும் கடுமையான எதிர்ப்பு! விவரம் உள்ளே
சினிமா

சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம்... தமிழகத்திலும் கடுமையான எதிர்ப்பு! விவரம் உள்ளே

'வதந்திகளை நம்பாதீர்கள்... அவர் நலமாக இருக்கிறார்!'- சரத் பாபுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் விளக்கம்!
சினிமா

'வதந்திகளை நம்பாதீர்கள்... அவர் நலமாக இருக்கிறார்!'- சரத் பாபுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

“மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர்!”- நடிகர் மனோபாலா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிக்கை!
சினிமா

“மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர்!”- நடிகர் மனோபாலா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிக்கை!