'வதந்திகளை நம்பாதீர்கள்... அவர் நலமாக இருக்கிறார்!'- சரத் பாபுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

சரத் பாபுவின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் விளக்கம்,actor sarath babu family important statement on his health and rumours | Galatta

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சரத் பாபு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த 1973 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ராம ராஜியம் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கிய நடிகர் சரத் பாபு 1977 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கே.பாலச்சந்தர் அவர்களின் நிழல் நிஜமாகிறது, மரோ சரித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்த சரத் பாபு, இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

தொடர்ந்து கடந்த 40 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு, தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980 - 90களில் காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்த சரத் பாபு, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சமீபத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத் பாபு நடித்துள்ளார். 

இதனிடையே 71 வயதாகும் நடிகர் சரத்பாபு கடந்த மூன்று வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். தற்சமயம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் சரத் பாபு திடீரென உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின. செய்திகள் வெளிவந்த சில நிமிடங்களிலேயே சரத் பாபுவின் குடும்பத்தினர் இந்த பொய்யான செய்திகளுக்கு விளக்கம் அளித்து பதில் அளித்துள்ளனர். “நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அனைத்து செய்திகளும் தவறாக வருகின்றன” என்றும், “தற்போது சரத் பாபு சற்று குணமடைந்து அவருக்கான அறை மாற்றப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ள குடும்பத்தினர்,  "விரைவில் பூரண குணமடைந்து ஊடகங்களிடம் சரத் பாபு பேசுவார் என்று நம்புகிறோம்" என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக "சமூக வலைதளங்களில் வரும் இது போன்ற போலியான செய்திகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்" எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

முன்னதாக யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று மே 3ம் தேதி நடிகர் மனோபாலா உயிரிழந்த நிலையில், அடுத்த அதிர்ச்சி செய்தியாக சரத்பாபு அவர்கள் உயிரிழந்ததாக வந்த இந்த வதந்தியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சரத்பாபு விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டுமென கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.
 

சினிமா

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" | "சுட்டா தல எனக்கு"- நடிகராக மனதை விட்டு நீங்காத மனோபாலாவை நினைவு கூறும் ரசிகர்கள்!

தங்கலான் -  கங்குவா வரிசையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

தங்கலான் -  கங்குவா வரிசையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

'சீயான் விக்ரமுக்கு எலும்பு முறிவு!'- பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்கான ஒத்திகையின் போது விபத்து! விவரம் உள்ளே
சினிமா

'சீயான் விக்ரமுக்கு எலும்பு முறிவு!'- பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்கான ஒத்திகையின் போது விபத்து! விவரம் உள்ளே