அஜித் குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றுகிறார்.

விஸ்வாசம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி இமான் அண்ணாதுரை படத்திற்கும் இசையமைக்கிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளை திருவிழாவாக மாற்ற வருகிறது அண்ணாத்த திரைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், ஐக்கி ஷெராப், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அண்ணாதுரை திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியானது.

இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின்  ஒட்டுமொத்த ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.