Super deluxe இயக்குனரின் அடுத்த படைப்பு... தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலாஜி - இணையத்தில் வைரலாகும் அப்டேட்... விவரம் இதோ..

தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலாஜி இணைய தொடர் வைரல் அப்டேட் இதோ. - Thiyagarajan Kumararaja next film update | Galatta

ஒடிடி தளங்களில் உலகளாவிய பட்டியலில் முன்னணியில் இருக்கும் தளங்களில் ஒன்று அமேசான் பிரைம். இதன் ஒடிடி தளம் இந்தியாவில் நாளுக்கு நாள் விரிவடைய மொழி சார்ந்த உள்ளடக்கங்களை தயாரித்து வருகின்றது. அதன்படி பிரைம் ஒடிடி தளத்தில் புகழ்பெற்ற ஆந்தாலாஜி இணைய தொடர் ‘மாடர்ன் லவ்’. கடந்த ஆண்டு ‘மாடர்ன் லவ்’ என்ற பெயரில் மூன்று முக்கிய நகரங்களான மும்பை, ஹைதராபாத், சென்னை என்று மையப்படுத்தி தொடர்களை தயாரிப்பதாக அறிவித்தது பிரைம். மேல் நாடுகளில் பிரபலமான ‘மாடர்ன் லவ்’ தொடர் இந்தியாவில் ‘மாடர்ன் லவ் மும்பை’  என்ற பெயரில் பிரைம் ஒடிடியின் முதல் மாடர்ன் லவ் தயாரிப்பு வெளியானது. எதிர்பார்த்த படி மாடர்ன் லவ் மும்பை தொடர் இந்தியா அளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் அடுத்த தயாரிப்பான ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ என்ற பெயரில் ஒரு ஆந்தாலாஜி தொடரை வெளியிட்டது. எதிர்பார்ப்பை வெற்றியை இந்த தொடரும் பெற்று வெற்றியை பெற்றது. இந்நிலையில் மாடர்ன் லவ் பட்டியல் வரிசையில் தமிழில் ‘மாடர்ன் லவ் சென்னை’ வெளியாகவுள்ளது. உணர்வுகளையும் காதலையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் கதை கருவாக கொண்டு உருவான ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடர் வரும் மே 18 ம் தேதி பிரைம் ஒடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு..

இந்த மாடர்ன் லவ் சென்னை தொடரில் மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளன. அதில் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் உருவான ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ எபிசோடில் கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடித்துள்ளனர்.. இயக்குனர் அக்ஷய் சுந்தர் இயக்கத்தில் ‘மார்கழி’ எபிசோடில் சஞ்சுளா சாரதி, ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.. இந்த எபிசோடுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மற்றும் இயக்குனர் கிருஷ்ணா குமார் ராம்குமார் இயக்கத்தில் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்ற எபிசோடில் ரித்து வர்மா, சம்யுக்தா, பவன் அலெக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.. இந்த பகுதிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் உருவாகும் ‘இமைகள்’ எபிசோடில் அசோக் செல்வன், டிஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பகுதிக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மற்றும் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவான லாலாகுண்டா பொம்மைகள் எபிசோடில் ஸ்ரீ கெளரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சியோன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அதை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனர் தியாகராஜான் குமராஜா ‘நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடை இயக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த இணைய தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இந்த தொடர் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனது. 

 

ready to stumble upon love in the heart of Chennai?
🏠💙#ModernLoveOnPrime, May 18@tylerdurdenand1 #BharathiRaja @ilaiyaraaja #BalajiSakthivel @Dir_Rajumurugan @Krishnakum25249 @AkshaySundher #Thiagarajankumararaja @gvprakash @RSeanRoldan @ashokselvan @riturv pic.twitter.com/OptKjTFdJY

— prime video IN (@PrimeVideoIN) May 8, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான லுக்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - வைரலாகும் ‘லால் சலாம்’ Glimpse இதோ..
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான லுக்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - வைரலாகும் ‘லால் சலாம்’ Glimpse இதோ..

“இளம் தலைமுறையினரை பார்த்து கவலை கொள்கிறேன்..” AI குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“இளம் தலைமுறையினரை பார்த்து கவலை கொள்கிறேன்..” AI குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..

 “விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1ரூபாய்..” மாஸ் காட்டிய விஷால் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1ரூபாய்..” மாஸ் காட்டிய விஷால் – வைரலாகும் வீடியோ இதோ..