"அப்போ NO சொல்லி ESCAPE ஆயிட்டேன்!"- கருமேகங்கள் கலைகின்றன படத்தில் தங்கர் பச்சானுடன் இணைந்தது எப்படி? GVMன் பதில் இதோ

தங்கர் பச்சானுடன் இணைந்த அனுபவம் பகிர்ந்த GVM,gautham vasudev menon says why he worked in karumegangal kalaiginrana | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2வது பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முன்னதாக இவரது இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த அதிரடி ஆக்சன் படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்த சில வாரங்களில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதே மேனன் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் அருவி பட நடிகை அதிதி பாலன், யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், லெனின் படத்தொகுப்பு செய்துள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம், “சார் நீங்களே ஒரு பெரிய இயக்குனர், எங்கள் எல்லோருக்குமே பிடித்த ஒரு ஜாம்பவான் இயக்குனரான தங்கர் பச்சான் சாருடைய படத்தில் நடித்திருக்கிறீர்கள்... அந்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்…” எனக் கேட்டபோது, “நான் அண்மையில் கூட ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தேன். அவரிடம் நான் இல்லை என சொல்ல முடியாது. ஒருமுறை பள்ளிக்கூடம் படத்திற்காக கூப்பிட்டார். அப்போது NO என சொல்லி ESCAPE ஆகிவிட்டேன். அதன் பிறகு மீண்டும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவர் கேட்கும் போது என்னால் முடியாது என்ன சொல்ல முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு புத்தகம் படிப்பது போல அந்த விஷயத்தை எனக்கு சொன்னார். அது மிகவும் அழகாக இருந்தது. பின்பு அவர் சொன்னார் பாரதிராஜா சார் தான் இந்த படத்தில் ஹீரோ என்று சொன்னார். சரி அவரோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று… இந்த இரண்டு காரணங்களுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன்.” என பதிலளித்துள்ளார். கருமேகங்கள் கலைகின்றன பட இசை வெளியீட்டு விழா நிகழ்வின் வீடியோ இதோ… 
 

மாரி செல்வராஜின் மாமன்னன் பட அசத்தலான புது விருந்து... இசைப்புயல் ARரஹ்மானின் மாஸான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! விவரம் இதோ
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட அசத்தலான புது விருந்து... இசைப்புயல் ARரஹ்மானின் மாஸான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! விவரம் இதோ

துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு கொடுத்த SUNDAY SPECIAL TREAT... செம்ம ஸ்டைலாக வந்த அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு கொடுத்த SUNDAY SPECIAL TREAT... செம்ம ஸ்டைலாக வந்த அட்டகாசமான வீடியோ இதோ!

செல்ல மகனுக்கு செம்ம பெயர் சூட்டிய இயக்குனர் அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
சினிமா

செல்ல மகனுக்கு செம்ம பெயர் சூட்டிய இயக்குனர் அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!