சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று நாயகி.600 எபிசோடுகளை தாண்டி சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றானது நாயகி.விகடன் டெலிவிஸ்டாஸ் இந்த சீரியலை தயாரித்துள்ளனர்.திலீப் ராயன் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தார்.

Sun TV Nayagi Serial Hero Heroine Changed

முதலில் விஜயலக்ஷ்மி இந்த சீரியலின் நாயகியாக நடித்துவந்தார்.சில காரணங்களால் வித்யா பிரதீப் இந்த தொடரின் நாயகியாக பின்னர் வந்தார்.அம்பிகா,பாப்ரி கோஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.

Sun TV Nayagi Serial Hero Heroine Changed

கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.நாயகி தொடரின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது ஆனால் இதில் ஹீரோவாக தெய்வமகள் கிருஷ்ணாவும்,ஹீரோயினாக தொகுப்பாளினி நக்ஷத்திராவும் நடிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டனர்.இந்த திடீர் ஹீரோ-ஹீரோயின் மாற்றம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் புதிய கதைக்களத்துடன் இந்த தொடரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Finally shooting started #nayagi #suntv #suntvserial #vikatan with new twist

A post shared by Papri Ghosh (@paprighoshofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NAYAGI “Reloaded!!!” Fun has just begun😜 @suntv @vikatan_tv #nayagiserial #suntv #vikatan #onthesets #nayagi

A post shared by IamKrishna (@iamkrishna1881) on