தமிழ் திரையுலகில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அசத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த ஆண்டு சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் சீரான நடிப்புடன் ஜொலித்தார். 

Aishwarya Rajesh Reply Comment To A Fan Goes Viral

இந்நிலையில் ஐஷ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டார். இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்த ரசிகை ஒருவர், நான் உங்களின் மிகப்பெரிய ரசிகர். உங்களுக்காக செத்துவிட கூடவும் தயார் என்று பதிவிட... ஷாக்கான ஐஸ்வர்யா ராஜேஷ்,மிக்க நன்றி. தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். வாழ்க்கை என்பது சாவதற்காக கிடையாது. நான் என்றும் உங்கள் நண்பராக இருக்கிறேன் ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்று பதிலளித்துள்ளார். 

Aishwarya Rajesh Reply Comment To A Fan Goes Viral

ரசிகர்கள் மீது அக்கறையோடு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவு வைரலாகி வருகிறது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் க/பே.ரனசிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

❤️❤️❤️Clicked @antonyfernandophotography

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on