தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.சன் டிவியின் சீரியல் குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு குடும்பம் கல்யாண வீடு.2018 முதல் இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த தொடர் 2020 கடைசியில் நிறைவுக்கு வந்தது.இந்த தொடர் சட்டென்று முடிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.திருமுருகன் இந்த தொடரை இயக்கி நடித்து வந்தார்.இந்த தொடரில் முதலில் ஹீரோயினாக ஸ்பூர்த்தி கௌடா நடித்து வந்தார்.கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது அவர் தொடரில் இருந்து மாற்றப்பட்டு,கன்னிகா ரவி ஹீரோயினாக நடித்து வந்தார்.

மௌலி இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.தற்போது இந்த தொடரில் ஸ்வேதா என்ற முக்கிய வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த அஞ்சனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சனா.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Anjana k r (@anjana.k.r)